Idhayam Matrimony

தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்பிப்பு

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

 சென்னை : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புது ரயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளது.

சென்னை - செங்கல்பட்டு ரயில் பாதை, தென் மாவட்டங்களுக்கு செல்ல பிரதான பாதையாக இருக்கிறது. இவற்றில், 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் பயணியர் சென்று வருகின்றனர். பயணியர் தேவைக்கு, புறநகர் மின்சார ரயில் இயக்கம் இல்லை. கூடுதல் ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது, மூன்று பாதைகள் உள்ளன. போதிய ரயில் பாதை இல்லாததால், ரயில் சேவை அதிகரிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.  எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புது பாதையை, ரயில்வேயுடன் இணைந்து அமைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது. அதன்படி, இந்த திட்டத்திற்கான, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநில அரசுகள், ரயில்வேயுடன் இணைந்து, திட்டப்பணிகளை நிறைவேற்றுகின்றன.  அந்த வகையில், தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், புறநகர் பயணியருக்கான சேவையை வழங்க, இந்த திட்டப்பணி மேற்கொள்ள உள்ளது.

அதன்படி, 1,165 கோடி ரூபாயில் இந்த திட்டம் செயல்படுத்த, டி.பி.ஆர்., எனும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். இதற்கான அறிவிப்பை, ரயில்வே வாரியம் வெளியிடும். அதன்பின், போதிய நிலங்களை கையகப்படுத்தி, ரயில் பாதை பணிகளை மேற்கொள்வோம். இந்த புதிய பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில்களை இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து