எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மன்னார்குடி: மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட்டில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் சென்னையிலிருந்து ஒரு ஆய்வாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் கார் மற்றும் பாதுகாப்பு வேனில் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பாபா பக்ருதீன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாரா மேலும், அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ள ஆவணங்கள், முக்கிய தடையங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்தும் கைப்பேசி உரையாடல், தொலைப்பேசிகளை கைப்பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணிக்கு முடிந்ததையடுத்து பாபா பக்ருதீனை போலீஸார் பாதுகாப்புடன் சென்னைக்கு மேல் விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
போலீஸார் வேனில் இருந்தபடி பாபா பக்ருதீன், செய்தியாளர்களிடம் பேசியது, பழைய வழக்கிற்காக வந்து விசாரிப்பதாக தெரிகிறது. புதிய புகார் வழக்கா என கேட்டதற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனக் கூறினார். வீட்டிலிருந்து வங்கி கணக்கு புத்தகம், பென் டிரைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவதற்காக நான் அளித்திருந்த அனுமதி கடிதத்தின் நகல் ஆகியவற்றை மட்டும் அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர் என்றார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை காரணமாக மன்னார்குடி பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கெனவே,கடந்த 2021 ஆம் ஆண்டு பாபா பக்ரூதீன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


