எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வருகிற 6-ம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ.க. அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி, கழகத் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலோடு, தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் தி.மு.க. மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
தி.மு.க. மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்கள் மற்றும் மாணவர் அணியினருடன் பெருமளவில் பங்கேற்று ஆர்பாட்டத்தை வெற்றியடைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் கல்வி உரிமை; தமிழ்நாட்டின் மாநில உரிமையை காத்திட நாம் அனைவரும் அணி திரள்வோம். யு.ஜி.சி.யின் அதிகார அத்துமீறலை முறியடிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


