எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நேற்று மாலை 5 :00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி வழங்கியது. இதனையடுத்து அங்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இதனிடையே மலையை காக்க, நேற்று (பிப்.,4) அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு மதுரை நகர போலீசார் அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, விழாக்காலமான பிப்., 11 வரை அனுமதி வழங்குவது கடினம் என அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று (நேற்று) மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தலாம். இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பைத் தர வேண்டும். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும், அது அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து மதுரை பழங்காநத்தத்தில் ஏராளமான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


