எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவள்ளூர் : ஜி.பி.எஸ். நோய் பாதித்து திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் மரணமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மாவட்டம் முழுவதும் அந்நோய் பரவியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன், ‘கில்லன் பாரே சின்ட்ரோம்’ என்ற ஜி.பி.எஸ். நோய் பாதிப்புக்குள்ளாகி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜி.பி.எஸ். நோய் தொற்று தமிழகத்துக்கும் பரவியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோய் பாதித்து, சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து திருவள்ளூா் அருகே திருவூரில் மருத்துவக் குழுவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், உலகிலேயே அதிக ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடமாக இருக்கும் மகாராஷ்டிர மாநிலம் புணேவில், சின்ஹகத் சாலையில்தான் அதிக நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பகுதியைத் தாண்டி, முந்த்வா, கேத், மாவல், சிகாலி என மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு பரவியிருப்பது சுகாதாரத் துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது மாவட்டம் முழுவதுமிருந்து புதிது புதிதாக நோய் பாதித்து மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், ஜி.பி.எஸ். பாதித்த 158 பேரில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மரணமடைந்த 5 பேருக்கு இந்த தொற்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தற்போது புணேவிலிருந்து 31 நோயாளிகளும், இதர கிராமங்களிலிருந்து 83 பேரும், ஊரகப் பகுதியிலிருந்து 18 பேரும், இதர மாவட்டங்களிலிருந்து 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


