முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி குறித்து பாண்டிங்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      விளையாட்டு
Ricky-Ponting 2023-10-17

Source: provided

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளில் தற்போது உள்ள வீரர்களின் தரத்தை பாருங்கள். ஐ.சி.சி.  தொடர்களில் அவர்களது அண்மைய செயல்பாட்டை பாருங்கள். இரண்டு அணிகளும் தவிர்க்க முடியாத அணிகள். அவர்களை வெல்வது கடினம்.  

இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில் தற்போது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வரும் மற்றொரு அணி என்றால் அது பாகிஸ்தான் தான். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களது செயல்பாடு அபாரமாக உள்ளது. இது மாதிரியான பெரிய தொடர்களில் அவர்களது செயல்பாடு கணிக்க முடியாதது என கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

___________________________________________________________________________

ஓய்வு பெறுகிறார் கருணாரத்னே

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி திமுத் கருணாரத்னே, இலங்கை அணிக்காக விளையாடவுள்ள 100-வது டெஸ்ட் போட்டியாகும். இலங்கை அணிக்காக கருணாரத்னே 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,316 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும்.  ஓய்வு முடிவை அறிவித்து திமுத் கருணாரத்னே பேசியதாவது:  

எனக்கு தனிப்பட்ட சில திட்டங்கள் இருக்கின்றன. அணியில் உள்ள மூத்த வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் போன்ற வீரர்களுடன் ஆலோசித்துவிட்டு அதன் பிறகே எனது ஓய்வு முடிவை எடுத்துள்ளேன்.   இலங்கை அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள மகிழ்ச்சியான தருணத்தில் எனது ஓய்வு முடிவை அறிவிக்க விரும்பினேன்.  இலங்கை அணி ஓராண்டில் மிகவும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், 10,000 ரன்கள் குவிக்கும் இலக்கு மிகவும் தொலை தூரத்தில் இருக்கிறது. இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே நான் சாதனையாக உணர்கிறேன் என்றார்.

___________________________________________________________________________

ஹிமான்ஷு பகிர்ந்த தகவல்

ரஞ்சி கோப்பையில் விளையாடிய விராட் கோலிகோலியை அவுட்டாக்க  தங்களது பஸ் டிரைவர் திட்டம் கொடுத்தார்  என்று ஹிமான்ஷு சங்வான் தெரிவித்தார்.  இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- விராட் கோலியிடம் பந்தை கையெழுத்திடுமாறு கொடுத்தபோது இதில்தான் என்னை அவுட்டாக்கினீர்களா? அது மிகவும் நல்ல பந்து. நீங்கள் நல்ல பவுலர். தொடர்ந்து கடினமாக உழையுங்கள். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார். அது என்னுடைய வாழ்வின் மிகவும் முக்கியமான விக்கெட். ஏனெனில் விராட் கோலி நம்முடைய மொத்த நாட்டின் உத்வேகமாக இருக்கிறார்.

என் வாழ்வில் முதல் முறையாக அவ்வளவு ரசிகர்கள் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்ததைப் பார்த்தேன். எனவே அது எங்கள் அணிக்கு ஸ்பெஷலான விஷயம். அந்தப் போட்டிக்கு முன்பாக ரிஷப் பண்ட், விராட் கோலி விளையாட உள்ளதாக பேச்சுக்கள் காணப்பட்டன. அப்போது போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. பின்னர் பண்ட் விளையாட மாட்டார் என்றும் கோலி விளையாடுவார் நேரலை ஒளிபரப்பும் உள்ளது என்பதையும் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

அப்போது ரயில்வேஸ் அணியின் முன்னணி பவுலரான என்னால் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியும் என்று எங்கள் அணி வீரர்கள் சொன்னார்கள். பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அதனுடைய டிரைவர் கூட நீங்கள் 4 - 5 ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலி அவுட்டாகி விடுவார் என்று சொன்னார். அதனால் எனக்குத் தன்னம்பிக்கை கிடைத்தது. மற்றவரின் பலவீனத்தை பார்க்காமல் என்னுடைய பலத்தில் நான் கவனம் செலுத்தினேன். அதன் பயனாக விக்கெட் கிடைத்தது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து