Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்கு செலுத்திய தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      தமிழகம்
Erode 2025 01 17

Source: provided

ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்aதிரகுமார் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது மனைவி, மகன், மகளுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து