எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மறு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா மீது முடிவு எடுக்காமல் கவர்னர் மவுனமாக இருக்கலாமா? என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்க வேண்டும் என கடந்த 3 தினங்களுக்கு முன் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சுப்ரீம்கோர்ட்டில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா..? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை' என்று கவர்னர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்? என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.
மேலும் மாநில அரசால் மீண்டும் அனுப்பப்படும் மசோதா மீது கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும், மசோதாவை ஜனாதிபதிக்கு, கவர்னர் அனுப்பினால், அதன்மீது ஜனாதிபதி என்ன முடிவுகளை எடுக்கலாம்? என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.
அதற்கு தமிழக அரசு, மசோதாவை திருப்பி அனுப்பும் போது காரணத்தை கவர்னர் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தது. மறுபரிசீலனைக்கான காரணத்தை குறிப்பிடாதபோது அரசு எவ்வாறு பரிசீலிக்கும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய மசோதாவா என்பதை கவர்னர் ஆய்வுசெய்ய வேண்டும். கவர்னர் தனது சுய முடிவையோ, மத்திய அரசின் முடிவையோ எடுக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும், மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார் என்றும், கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது கூட்டாட்சிக்கு முடிவுகட்டுவதாக அமையும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதங்களை முன்வைத்தார். இறுதி விசாரணையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து விட்டதாக கூறப்படும்நிலையில், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


