எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, ஒரே நாடு ஒரே மொழியைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
யு.ஜி.சி. யின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தி.மு.க. மாணவரணி சார்பில் நேற்று (பிப். 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஒரே நாடு ஒரே மொழியைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.
"ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம், தங்களுடையதைத் தவிர இந்த நாட்டில் உள்ள மற்ற அனைத்து வரலாறுகளையும் அனைத்து கலாசாரங்களையும், அனைத்து மரபுகளையும் ஒழிப்பதே என்று நான் சிறிது காலமாகவே சொல்லி வருகிறேன். அதுதான் அவர்களின் தொடக்கப்புள்ளி. அதைத்தான் அவர்கள் அடைய விரும்புகிறார்கள்.
அவர்கள் ஒரே கருத்தை, ஒரே வரலாறை, ஒரே பாரம்பரியத்தை, ஒரே மொழியை இந்த நாட்டின் மீது திணிக்க விரும்புவதால் அரசியலமைப்பைத் தாக்குகின்றனர். வெவ்வேறு மாநிலங்களின் கல்வி முறையை ஒரே கல்விமுறையாக மாற்றும் முயற்சி இது.
இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.ஸால் அரசியலமைப்பை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். வர்கள் நமது மாநிலங்களைத் தாக்க முடியாது. அவர்கள் நமது கலாசாரங்கள், நமது மரபுகள், நமது வரலாறுகளைத் தாக்க முடியாது என்று புரிய வைக்க வேண்டும்" என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


