எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் களமிறங்கினர். இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோகித் ஆரம்பம் முதலே ரன் அடிக்க முடியாமல் தடுமாறினார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வரும் அவர், இந்த போட்டியிலாவது ரன் குவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் மீண்டும் சொதப்பிய அவர் 7 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
டெஸ்ட்: இலங்கை 229 ரன்கள்
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் முடிவில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் அடித்துள்ளது. குசல் மென்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமரா ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். சண்டிமால் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும், மேத்யூ குனேமேன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம்
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக கடந்த 2015-16 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25 ஆம் தேதி பார்படாஸில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் ஜியார்ஜியாவில் ஜூலை 3 ஆம் தேதியும், கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஜூலை 12 ஆம் தேதியும் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகள் கிங்ஸ்டனிலும், அடுத்த மூன்று போட்டிகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


