எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 1,122 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் 31 ஆயிரத்து 946 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 698 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதாவது 2022-ம் ஆண்டு 10 ஆயிரத்து 665 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 ஆயிரத்து 325 பேரும், 2023-ம் ஆண்டு 10 ஆயிரத்து 256 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 ஆயிரத்து 470 பேரும், 2024-ம் ஆண்டு 11 ஆயிரத்து 25 வழக்கு பதிவு செய்யப்பட்டு 17 ஆயிரத்து 903 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


