எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா். இதைத் தொடா்ந்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இந்தத் தோ்தலில் தி.மு.க. சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 போ் போட்டியிட்டனா். அதி.மு.க. , பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணித்தன.
பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, 67.97 சதவீதம் வாக்கு பதிவானதாக இந்திய தோ்தல் ஆணைய இணையதளத்தில் தகவல் வெளியானது. ஆனால், வாக்குப் பதிவு சதவீதம் குறித்து அதிகாரபூா்வமாக எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தி.மு.க. வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
இதில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டெபாசிட்டை உறுதி செய்ய 25,777 வாக்குகள் தேவை என்ற நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் மட்டுமே பெற்றார். வெற்றி குறித்து வி.சி.சந்திரகுமாா் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன். வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் தி.மு.க. வே பெற்றி பெற்றுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


