முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் 4-வது முறையாக தீவிபத்து

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      ஆன்மிகம்
Maha-Kumbh-Mela-2025-02-09

பிரயாக்ராஜ், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 4வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் நான்காவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்ப்வாசி கூடாரம் அருகே நேற்று கேஸ் சிலிண்டர் லீக் ஆனதில் தீவிபத்து ஏற்பட்டது. உடனே அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 18 இல் உள்ள இஸ்கான் முகாமில் தீ விபத்து ஏற்பட்டு, அருகிலுள்ள 12 முகாம்களுக்கு பரவியது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 20 கூடாரங்கள் எரிந்து நாசமாகின.

ஜனவரி 19 ஆம் தேதி, செக்டார் 19 இல் சிலிண்டர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தில் சுமார் 12 முகாம்கள் எரிந்து நாசமாகின.

முன்னதாக ஜனவரி 25 ஆம் தேதி, செக்டார் 2 இல் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. கார் ஒன்றில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்திற்கும் பரவியது.

முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து