எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் ஒன்றாக தேஜஸ் போர் விமானத்தில் பறந்தனர்.
பெங்களூரு எலஹங்கா விமான பயிற்சி மையத்தில், இன்று (பிப்.10) முதல் பிப். 14ம் தேதி வரை 'ஏரோ இந்தியா 2025' விமான கண்காட்சி நடக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் விமானப் படைகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விமான கண்காட்சியை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏரோ இந்தியா கண்காட்சியையொட்டி, இந்திய விமானப்படை விமானங்களின் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் நேற்று (பிப்.9) பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்திலிருந்து தேஜஸ் போர் விமானத்தில் பறந்தனர். சுமார் 45 நிமிடங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானத்தில் இரு ராணுவ தலைமை அதிகாரிகள் ஒன்றாக பயணிப்பது இதுவே முதல்முறையாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


