எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தாம்பரம்: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, மாநில தலைவர் தீனதயாள், மாநில பொருளாளர் ருக்மாங்கதன் ஆகியோரின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திருச்சியில் கூடிய ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் கடந்த 4-ம் தேதி எடுக்கப்பட்ட முடிவின் படி 10 அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ம் தேதி வட்டார அளவிலான மாலை நேர ஆர்ப்பாட்டத்தை மிகுந்த எழுச்சியாக நடத்துவது, அதனை தொடர்ந்து வருகிற 25-ம் தேதி மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அறிவித்து நடத்த உள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பங்குபெறுவார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டுமென தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


