Idhayam Matrimony

மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      இந்தியா
Manipur 2023 06 06

Source: provided

இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.

இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான மணிப்பூர் தேசிய புரட்சிகர முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டத்தின் டெல்லூ மகா லெய்காயில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாதுகாப்புப்படையினர் தடைசெய்யப்பட்ட அமைப்பின் மறைவிடத்தை கண்டுபிடித்து அங்கிருந்த 7 பயங்கரவாதிகளை கைது செய்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து ஏ1 ரக துப்பாக்கி, 15 தோட்டாக்கள், ஏகே 47ரக துப்பாக்கி, செல்ப்-லோடிங் ரைபிள்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ஐந்து உள்ளிட்ட சில ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து