Idhayam Matrimony

ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் வரும் 19-ம் தேதி திறப்பு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      இந்தியா
Rss-2023-04-13

Source: provided

புதுடில்லி: டில்லியில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.  அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பா.ஜ.க.  தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆர்.எஸ்.எஸ்.  அலுவலகம் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

டில்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.  அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றால் கட்டடப் பணிகள் தாமதமான நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

3.75 ஏக்கர் நிலத்தில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், 12 தளங்களுடன் 3 கோபுரங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் சுமார் 75,000 பேரிடம் நன்கொடையாக பெறப்பட்ட பணத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கட்டடத்தில் அமைந்துள்ள பிரதான கலையரங்கத்துக்கு, அயோத்தி கோயில் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களின் ஒருவரான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் அமைந்துள்ள நூலகத்தில் 8,500 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவ உதவி மையமும் இந்த கட்டடத்தில் செயல்படவுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ்.  அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான இடம் என 300 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை வருகின்ற 19 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்.  மோகன் பகவத் திறந்துவைக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து