எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, இந்திய அணியின் பீல்டிங் சிறப்பாக இருப்பதாக பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார்.
பீல்டிங் அருமை...
இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. இந்தத் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக பீல்டிங் செய்தது. கேட்ச்சுகள், ரன் அவுட்டுகள் என இந்திய அணியினர் அசத்தினர். கடைசி போட்டியில் சிறந்த பீல்டிங்கிற்கான விருது ஸ்ரேயாஷ் ஐயருக்கு வழங்கப்பட்டது. ஓவ்வொரு போட்டியிலும் சிறந்த பீல்டிங் செய்பவர்களுக்கு இந்த விருது அளிப்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான வாய்ப்புகள்...
இது குறித்து பீல்டிங் பயிற்சியாளர் திலீப் கூறியதாவது: நாங்கள் இந்தத் தொடர் முழுவதும் சில சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கினோம். அது பீல்டிங்கில் சில கோணத்தை சிறப்பாக ஏற்படுத்துவதாகட்டும் பின்புறம் ஓடுவது, கேட்ச் பிடிப்பது என போட்டிகளில் முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். என்னைப் பொருத்தவரை அனைவருமே சிறப்பாக செயல்பட்டார்கள்.
நம்பமுடியாத திருப்தி...
ஒரு அணியாக பீல்டிங்கில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் அமைதியாக தொடர்ச்சியாக நன்றாக விளையாடியது நம்பமுடியாத அளவுக்கு திருப்தியாக இருக்கிறது. 2ஆவது போட்டியில் பின்புறமாக ஓடிச்சென்று ஷுப்மன் கில் பிடித்த கேட்ச் முக்கியமானதாகும். எல்லைக் கோட்டில் பவுண்டரிகளை சேமித்தது, முக்கியமான ரன் - அவுட்டுகள் என அனைத்துமே முக்கியமானது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


