எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை சாம்பியன்ஸ் டிராபி பிரதிபலிப்பதாக ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி...
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
ஜெய் ஷா புகழாரம்...
சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா கூறுகையில், “2025 ஆம் ஆண்டு ஆடவருக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கிறது. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக இருக்கும். ஒருநாள் போட்டி திறமைகளின் உச்சத்தை எடுத்துக்காட்டும். இந்தப் பரிசுத் தொகையானது விளையாட்டில் முதலீடு செய்வதற்கும், வருங்காலங்களில் கிரிக்கெட்டின் மதிப்பைக் கூட்டுவதற்கும் ஐ.சி.சி. யின் தற்போதைய நிலைப்பாட்டை கூறுகிறது” எனத் தெரிவித்தார்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை...
ஐ.சி.சி. யின் சாம்பியன்ஸ் டிராபி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் வடிவில் வருகிற 2027 ஆம் ஆண்டு முதல் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


