Idhayam Matrimony

கெஜ்ரிவால் பங்களா கட்டியதில் விதிமீறலா? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      இந்தியா
Kejrival 2024-01-05

புதுடில்லி, டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) உத்தரவிட்டு உள்ளது.

கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பதவி வகித்த போது, சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். இந்த பங்களாவில் ரூ.45 கோடி செலவு செய்து புனரமைப்பு பணிகளை அவர் மேற்கொண்டதாக துவக்கத்தில் இருந்தே பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி வந்தனர். டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது.இந்த பங்களாவில் பா.ஜ., சார்பில் முதல்வராக பதவியற்பவர் வசிக்க மாட்டார் என அக்கட்சி அறிவித்து உள்ளது. இந்த பங்களா கட்டியதில் முறைகேடு நடந்ததாக, மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் டில்லி பா.ஜ., தலைவர் புகார் மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த பங்களா தொடர்பாக ஆய்வு நடத்திய மத்திய பொதுப்பணித்துறை ஆய்வு செய்த அறிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்கு சி.வி.சி. உத்தரவிட்டு உள்ளது. இந்த பங்களா கட்டியதில் விதிமுறைகள் உள்ளதா என்பதை விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து