முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரீஸ்டைல் செஸ் தொடர்: உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      உலகம்
Gukesh 2023-09-01

Source: provided

பெர்லின் : 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம் பிடித்தார். 

குகேஷ் ஏமாற்றம்...

உலக சாம்பியன் குகேஷ், ஐந்து முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன் உள்பட 10 முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட 'பிரீஸ்டைல்' செஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் நாளில் இருந்தே உலக சாம்பியன் குகேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 7வது (3 புள்ளிகள்) இடம் பிடித்தார். தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் ஏமாற்றம் அளித்த குகேஷ், 5 அல்லது 6வது இடத்திற்கான போட்டியிலும் தோல்வி கண்டார்.

8-வது இடம்... 

இதையடுத்து 7 அல்லது 8வது இடத்திற்கான மோதலில் இந்தியாவின் குகேஷ், ஈரானின் அலிரேசாவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையிலான முதல் போட்டி 'டிரா' ஆனது. இதையடுத்து  2வது போட்டி நடைபெற்றது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், தொடக்கத்தில் இருந்தே மோசமாக செயல்பட்டார். வேறு வழியில்லாத நிலையில் 30-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைய, தொடரில் அவர் 8வது இடமே பெற்றார். அவருக்கு ரூ. 17.32 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

கெய்மர் சாம்பியன்...

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர், 1.5-0.5 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் பேபியானோ காருணாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அவர் ரூ. 1.73 கோடியை பரிசுத்தொகையாக பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து