எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மனிதர்களுக்கு பல வகைகளில் பயன்படக்கூடிய மரங்களில் ஒன்றாக தென்னை மரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு. ஆனைமலை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளருகின்றன. கடந்த சில மாதங்களாக, ரூ கோஸ், சுருள் வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு உள்ளிட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தென்னை மரங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. இது தவிர, வறட்சி காரணமாக அழிந்து வரும் தென்னை மரங்களும் ஏராளம்.
தற்போது, பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதன் காரணமாக, காய்ப்புத் திறன் வெகுவாக குறைந்துவிட்டது என்றும், பூச்சித் தாக்குதல் காரணமாக தென்னை மரங்களை வெட்ட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை நீடித்தால் தேங்காய் மட்டையில் இருந்து நாரை பிரிக்கும்போது கிடைக்கும் தேங்காய் மஞ்சை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வந்துவிடும் என்றும், இதன்மூலம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றும் தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேளாண் வல்லுநர்கள், தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினைத் தரக்கூடிய, அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. எனவே, மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்தி, தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


