எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
முனிச் : ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 14-ந்தேதி பாதுகாப்பு மாநாடு தொடங்கியது. இதில், ஆசிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், அமெரிக்க செனட் உறுப்பினர் எலிஸ்ஸா ஸ்லாட்கின், வார்சா மேயர் ரபால் ஜாஸ்கோவ்ஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், ஜனநாயக மீள்தன்மையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் பேசிய, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஜனநாயகம் ஒரு மேற்கத்திய பண்புநலன் என கூறிக்கொண்டு செயல்பட்டு வந்த மேற்கத்திய நாடுகள், மறுபுறம் உலகளாவிய தெற்கு பகுதியில் ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. அது இன்னும் நடக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த நாட்டில் மதிக்க கூடிய விசயங்கள் எல்லாவற்றையும், வெளிநாட்டில் கடைப்பிடிப்பதில்லை .
ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம். அதன்பின்னர் பிற நாடுகளின் வெற்றிகள், குறைபாடுகள் மற்றும் பொறுப்பு தன்மையை உலகளாவிய தெற்கு நாடுகளும் காணும் என்றார்.
தொடர்ந்து அவர், நாங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து சவால்களும், அதுவும் குறைந்த வருவாய் ஈட்டும்போதும், ஜனநாயக மாதிரிக்கு உண்மையாக நாங்கள் இருக்கிறோம். ஏறக்குறைய எங்களுடைய உலகை நீங்கள் பார்க்கும்போதே அது தெரியும். அதனை செய்து வரும் மிக அழகான ஒரே நாடாக நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் இந்தியா பெருமை கொள்ளும் வகையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


