எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கடற்கரைகளில் இருந்து சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கும் முன்பும் தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் அரசு நியமித்த ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். தலைமையிலான சிறப்பு குழு ஆய்வு செய்ததில், 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதுதெரிய வந்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு தரப்பில், “அணுசக்திக்கு தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதை பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை. மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கையையும் மத்திய அரசு வகுக்கவில்லை” என தெரிவித்திருந்தது.
விசாரணையில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ், கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுமணல் எடுக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி 5 விரிவான அறிக்கைகளை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (பிப்.17) தீர்ப்பளித்தனர். அதில், “சமூகத்தில் ஊழல் என்பது புற்று நோய் போன்றது. அதை ஆரம்பித்திலேயே அழிக்காவிடில் மொத்த சமுதாயமும் பாதிக்கப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குடன் நடத்தப்பட்ட இந்த தாது மணல் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். தடை செய்யப்பட்ட பிறகும் தாதுமணல் எடுக்கப்பட்டது அரசின் சிறப்பு குழு அளித்த அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
சட்டவிரோதமாக தாது மணல் இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி செய்யப்படுகிறது. உரிமத் தொகையாக தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட 5,832 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவு செல்லும் அதை வசூலிக்கவும் உத்தரவிடுகிறோம்.
இந்த விவகாரத்தில் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும். மோனோசைட் தாது கடத்தப்பட்டிருப்பதால் அது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும். எனவே இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. தாது மணல் சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக மாநில காவல் துறை பதிவு செய்த வழக்குகளை 4 வாரங்களில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
அரசியல்வாதிகளின் பங்கு இந்த விவகாரத்தில் இருப்பதை புறந்தள்ள முடியாது. சட்ட விரோத பணப்பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுவதாக நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


