எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று இண்டியா கூட்டணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்துக்கான நிதியை வழங்குவோம் என நிபந்தனை விதிப்பதையும், தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்து வரும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர், மாணவர், மாதர் என அனைவரும் அணி, அணியாக திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


