Idhayam Matrimony

அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      உலகம்
Trump 2024-12-21

Source: provided

அமெரிக்கா : அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்று ஒரு மாதமாகும் நிலையில், அவருக்கு எதிராக வாஷிங்டனில் போராட்டம் நடத்தப்பட்டது. 

அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 17-ம் தேதி அதிபர் நாள் அனுசரிக்கப்படும். இந்த நிலையில், 50,501 என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள், ‘அதிபர் நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பாதகைகளுடன் நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் போராட்டம் நடத்தினர். வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதேபோல், ப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலும் போராட்டம் நடைபெற்றது. பிறப்பால் குடியுரிமை தடைச் சட்டம் போன்ற டிரம்ப்பின் அதிரடி உத்தரவுகளுக்கு எதிராகவும், அரசு செயல்திறன் துறையில் எலான் மஸ்க்குக்கு முக்கியத்துவம் அளிப்பதை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

பாஸ்டன் நகரில் பனிப்பொழிவுக்கு மத்தியில் பேரணியாகச் சென்றவர்கள், எலான் மஸ்க்கை உடனடியாக அரசுத் துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர். இதேபோன்ற போராட்டத்தை கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதி 50501 இயக்கத்தினர் நடத்தினர். இந்த நிலையில், அரசு செயல்திறன் துறைக்கான அதிபரின் ஆலோசகராக மட்டுமே எலான் மஸ்க் செயல்படுவதாகவும், அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து