Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பகர் ஸமான் விளையாடுவது சந்தேகம் துபாய், பிப்.21- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பகர் ஸமான் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது. பகர் ஸமான் காயம்... ஐ.சி.சி. சாம்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      விளையாட்டு
pakarsman

Source: provided

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பகர் ஸமான்  விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது.

பகர் ஸமான் காயம்... 

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது. தசைப்பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக பகர் ஸமான் கிட்டத்தட்ட ஒரு இன்னிங்ஸ் முழுவதும் பீல்டிங்குக்கு வரவில்லை. தொடக்க ஆட்டக்காரராகவும் அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சௌத் ஷகீல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 4-வது வீரராக களமிறங்கிய பகர் ஸமான் பேட்டிங்கின்போது, மிகுந்த சிரமப்பட்டார். அவர் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

பெரும் பின்னடைவு...

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு பகர் ஸமான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். தற்போது காயம் காரணமாக மீண்டும் அணியில் இடம்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடவுள்ள நிலையில், பகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பகர் ஸமானுக்குப் பதிலாக இமாம் உல் ஹக் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து