Idhayam Matrimony

போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு, தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். இதனையடுத்து மும்மொழி கொள்கையில் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர். அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். உதயநிதி ஸ்டாலின் தனியாக வரத்தயாரா? என்று அண்ணாமலை எதிர் சவால் விடுத்தார்.

இந்தநிலையில், காலை உணவு வழங்கும் "அன்னம் தரும் அமுதக்கரங்கள் திட்டம்" சென்னை, ஜி.கே.எம் காலனி 20 வது தெரு - ஜம்புலிங்கம் மெயின் ரோடு பகுதியில் தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார். அண்ணாமலை ஒன்றும் கர்நாடக போலீஸ் கிடையாது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தின் செங்கலையாவது தொட்டு பார்க்கட்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து