எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : 74 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு கேரள அணி தேர்வாகியுள்ளது.
கேரளா 457 ரன்...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத்தில் நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் கேரளா மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த கேரள அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக முகமது அசாரூதீன் 177* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து விளையாடிய குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெற்றி பெற்றதாக அறிவிப்பு...
2ஆவது இன்னிங்ஸை விளையாடிய கேரள அணி 46 ஓவர்களில் 114/4 ரன்கள் எடுத்த போது போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது போட்டியின் கடைசி நாள் என்பதால் முதல் இன்னிங்ஸில் யார் அதிக ரன்கள் எடுத்தார்களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் முன்னிலைபெற்ற கேரளம் இறுதிப் போட்டிக்கு தேர்வானது. 74 ஆண்டுகள், 352 போட்டிகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது கேரள அணி.
முதல்முறையாக...
முதல்முறையாக ரஞ்சி கோப்பை இறுதியில் விளையாடவிருக்கும் இந்த அணியின் அசாரூதின் அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


