Idhayam Matrimony

தெலங்கானா சுரங்க விபத்து: இடிபாடுகளில் சிக்கியவர்களை நெருங்கியுள்ள மீட்புக்குழுவினர்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      இந்தியா
Telangana 2025-02-23

Source: provided

ஐதராபாத் : தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழு நெருங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய புளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவா்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில்  சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழு நெருங்கியுள்ளனர். மீட்புக் குழுவினர் சிக்கியுள்ளவர்களின் பெயரை அழைத்ததாகவும் ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெலங்கானா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சுரங்க விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து