எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி யுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தில்லி முதல்வர் அலுவலகத்தில் முந்தைய முதல்வர் வைத்திருந்த அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்களை தற்போதைய அரசு அகற்றியுள்ளதாக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி இன்று தலித் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தை நாட்டுக்குக் காட்டியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்களை அகற்றியுள்ளனர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கைவிட பிரதமர் நரேந்திர மோடி உயர்ந்தவர் என்று பாஜக நினைக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


