எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுறப் பாசன கால்வாய்களில் சுழற்சி முறையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 72.60 மில்லியன் கன அடி வீதம் மொத்தம் 457.58 மில்லியன் கன அடி தண்ணீர் சுழற்சி முறையில் 6 தவணைகளாக 26.02.2025 முதல் 26.05.2025 வரை மொத்தம் 90 நாட்களுக்கு இரண்டாம் போக விவசாய பாசனத்திற்கு கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 8000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


