எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் செல்லும் நாய்க்குட்டி கார் மோதி இறந்து விடுகிறது. தனது குட்டியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கோர்ட் வரை சென்று போராடுகிறது தாய் நாய். தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா? இல்லையா என்பதை நம்பமுடியாத காட்சிகளுடன், நம்பும் வகையில் சொல்வதே ‘கூரன் படம்’ .கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் நிதானமாக செயல்பட்டிருப்பவர். ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறது. ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். சட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல நாய் உள்ளிட்ட அனைத்துக்கும் சமம். என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், “மதுபானக் கடைகள் மூலம் எவ்வளவு பணம் வருகிறது என்று பார்க்கும் அராங்கம், அதன் மூலம் எவ்வளவு பிணம் விழுகிறது, என்பதை பார்ப்பதில்லை” உள்ளிட்ட தனது கூர்மையான வசனங்கள் மூலம் சமூக சீர்க்கேடுகளை கோடிட்டு காட்டியுள்ளார். தாய்மை உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் நிதின் வேமுபதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


