Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம்?

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      விளையாட்டு
South-Africa 2024-05-15

Source: provided

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி... 

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.  இன்று லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன.

அணியில் மாற்றமா?...

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இன்று விளையாடவுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் ஆல்ரவுண்டரான ஜியார்ஜ் லிண்டே கூடுதல் வீரராக சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மார்க்ரம் சந்தேகம்...

இங்கிலாந்துக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் பீல்டிங்கின்போது, அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் போட்டியில் அவர் அதன் பின் பீல்டிங்குக்கு வரவில்லை. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இறுதிப்போட்டியை துபாயில் விளையாடும் சூழல் ஏற்பட்டால், அந்த அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள். அதன் காரணமாகவே, இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜியார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து