எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : தனிப்பட்ட விளம்பரத்திற்காக அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தனிநபர்கள் தவிர்க்க வேண்டும் என்று ரோகித் சர்மாவை விமர்சித்த ஷாமாவுக்கு பி.சி.சி.ஐ. -யின் செயலாளர் தேவஜித் சைக்கியா பதிலடி கொடுத்துள்ளார்.
உடல் பருமன் சர்ச்சை...
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஷாமா முகமது தனது எக்ஸ் வலைதள பதிவில், “ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையைக் குறைக்க வேண்டும். இந்திய கேப்டன்களில் தாக்கத்தை ஏற்படுத்தாத கேப்டன் இவர்தான்” என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
சைக்கியா பதிலடி...
இதன் பின்னர் அந்த பதிவை ஷாமா நீக்கினார். இந்நிலையில் ரோகித் சர்மாவை விமர்சித்த ஷாமாவுக்கு பி.சி.சி.ஐ. -யின் செயலாளர் தேவஜித் சைக்கியா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, “முக்கியமான ஐ.சி.சி. போட்டிக்கு மத்தியில் இந்திய அணி இருக்கும்போது ஒரு பொறுப்பான நபர் இதுபோன்ற அற்பமான கருத்தை தெரிவிப்பது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. இது ஒரு தனிநபரையோ அல்லது குழுவையோ மனச்சோர்வடையச் செய்யலாம்.
அவதூறு அறிக்கை...
அனைத்து வீரர்களும் தங்கள் அதிகபட்ச திறனுடன் செயல்படுகிறார்கள், இதன் முடிவுகள் அனைவருக்கும் தெரியும். தேச நலனை விலையாகக் கொடுத்து தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தனிநபர்கள் தவிர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


