Idhayam Matrimony

பிரிட்டனில் இந்திய அமைச்சருக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      உலகம்
Jaishaker 2024-12-03

Source: provided

லண்டன்: பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.;

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை துவக்கியுள்ளன. இந்த சூழலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டன் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவரது இல்லத்திற்கு வெளியே குவிந்து இருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் காரில் ஏறுவதற்காக ஜெய்சங்கர் வெளியே வந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பிரிட்டனில் ஜெய்சங்கர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து