எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, கே.எல்.ராகுல் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது என்று முன்னாள் தலைமைப் பயிற்சியாளர், அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை...
இது குறித்து கும்ப்ளே பேசுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கே.எல்.ராகுல் ஆடிய இன்னிங்ஸ் அவருக்கு ‘நிறைய நம்பிக்கையை அளித்திருக்கும்’. அக்சர் படேல் விக்கெட் விழுந்தவுடன் கே.எல்.ராகுல் களமிறங்கினார். 34 பந்துகளில் 42 ரன்களை அவர் அடித்ததோடு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவோடு முக்கியக் கூட்டணிகளை அமைத்தார்.
நல்ல வேலை...
“அக்சர் படேலுக்கு முன்பாக ராகுல் களமிறங்க வேண்டும். அக்சர் படேல், விராட் கோலியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்ததில் நல்ல வேலை செய்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் கே.எல்.ராகுல் அதே இடத்தில் இறங்கினாலும் அவரும் இதைச் செய்திருப்பார். அவர் 30 ரன்களை எடுத்தால் போதும் வெற்றி இலக்கைக் கடந்து விடலாம் என்பதை உறுதி செய்வார். இதை அவர் சீரான முறையில் செய்தும் வருகிறார்.
நழுவிப் போனது...
நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாய்ப்பு அவருக்கு நழுவிப் போனது. ஆனால் ராகுல் ஒரு கிளாஸ் வீரர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்னிங்ஸ் அவரிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். அவர் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது, நன்றாக ஆடினால் ஒன்றும் சொல்வதற்கில்லை, ஆனால் ஒரு இன்னிங்சில் தோல்வி அடைந்தாலும் உடனே உலகமே அவருக்கு எதிராக திரண்டு எழுகிறது. அவர் விக்கெட் கீப்பிங்கிலும் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிலும் தன் திறமையை எடுத்துக் காட்டியுள்ளார்” என்கிறார் அனில் கும்ப்ளே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


