Idhayam Matrimony

எந்த மொழிக்கும் எதிரியல்ல: வலிந்து திணிக்கும் மொழிகளை மட்டுமே தி.மு.க. எதிர்க்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2025      தமிழகம்      அரசியல்
Stelin 2022 02 23

சென்னை, இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்; இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜ.க. அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது. தி.மு.க. அரசு, அரசியல் சட்டத்தை மதிக்கினது. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டத்தையே சிதைக்கும் வேலையை செய்கிறது.

தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரியல்ல. வலிந்து திணிக்கும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும். இந்தி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மொழிகளை காப்பது திராவிட இயக்கத்தின் மொழிக்கொள்கைதான். தாய்மொழியை காக்க தமிழகம் போட்டுத்தந்த பாதையையே பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன; தமிழ் உள்பட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும்.

ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கும் முயற்சிதான் இந்தித் திணிப்பு. இதை நேரடியாக சொன்னால் தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாது, மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்பதால்தான் மும்மொழிக் கொள்கையில் இந்தியை வலியுறுத்தவில்லை என்றும், ஏதேனும் ஒரு மொழியை படிக்கலாம் என்றும் பா.ஜ.க. அரசு பசப்புகிறது.

பா.ஜ.க. அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் வயிற்றில் அடிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் எனப் பிடிவாதமாக உள்ளதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, தன்னுடைய மொழிக்கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்; இந்தித் திணிப்பை எதிர்ப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து