எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது கைதான கன்னட நடிகை, இதுவரை 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததும், துபாக்கு மட்டும் 27 முறை சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சோ்ந்த நடிகை ரன்யா ராவ் (33), கா்நாடக காவல் துறையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வரும் டி.ஜி.பி. கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகள். பெங்களூரு, தயானந்தசாகா் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரன்யா ராவ், 2014-இல் நடிகா் சுதீப்புடன் ‘மாணிக்யா’, ‘பட்டாக்கி’ ஆகிய 2 கன்னடப் படங்களிலும், 2016-இல் நடிகா் விக்ரம் பிரபுவுடன் ‘வாகா’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளாா்.
திரைப்படத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இவா் அடிக்கடி துபாக்கு சென்று வந்துள்ளாா். கடந்த 15 நாள்களில் மட்டும் 4 முறை துபாக்கு சென்ற ரன்யா ராவ், பெங்களூருக்கு திரும்பும்போது அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து வந்துள்ளாா். காவல் துறை உயரதிகாரியின் வளா்ப்பு மகள் என்பதால், விமான நிலையத்தில் எவ்வித சோதனையும் இல்லாமல் வெளியே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, துபையில் இருந்து அதிக அளவிலான தங்க நகைகளை அணிந்தும், உடைகளில் தங்கத்தை மறைத்தும் கொண்டு வந்தநிலையில்தான் தற்போது கைதாகியிருக்கிறார். இவரது பாஸ்போர்ட் மூலமாக, இவர் 45 நாடுகளுக்குச் சென்று வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்த கடந்த சில வாரங்களாக நடிகை ரன்யா ராவை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். மாா்ச் 3-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துபாயில் இருந்து பெங்களூரு சா்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கிய நடிகை ரன்யா ராவிடம் விமான நிலைய போலீஸாரின் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனா்.
இந்த சோதனையில், ரன்யா ராவ் தனது உடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். மேலும், அந்த தங்கக் கட்டிகளுக்கும், அணிந்து வந்த தங்க நகைகளுக்கும் ரன்யா ராவிடம் உரிய ஆவணங்களோ, சுங்கவரி செலுத்தியதற்கான சான்றுகளோ இல்லை. இதைத் தொடா்ந்து, நடிகை ரன்யா ராவை கைதுசெய்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள், நகைகளை பறிமுதல் செய்தனா்.
பெங்களூருவில் உள்ள நடிகை ரன்யா ராவ் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக வைத்திருந்த ரூ. 2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 2.67 கோடி மதிப்புள்ள ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
இதனுடன் சேர்த்தால், நடிகை ரன்யா ராவிடம் இதுவரை ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


