Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம்: ஜெய்சங்கருக்கு உமர் அப்துல்லா கேள்வி

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2025      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

Source: provided

ஜம்மு : மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்றுமுன் தினம் லண்டனில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது, காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், பாகிஸ்தான் திருடி ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும் என்றார். 

இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எதிரொலித்தது. ஜெய்சங்கருக்கு காட்டமான கேள்விகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா பேசியதாவது:-

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரின் பகுதியை நாங்கள் மீட்போம் என்று வெளியுறவுத்துறை மந்திரி கூறுகிறார். அவர்களை யார் தடுத்தது? அதனை மீட்க வேண்டாம் என்று எப்போதாவது நாங்கள் கூறினோமோ? கார்கில் போர் நடந்த சமயத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. மீட்டு எடுத்து இருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. இப்போது நீங்கள் அதனை மீட்டெடுக்க விரும்பினால் நாங்கள் யாராவது வேண்டாம் என்று கூறினோமோ? இதேபோல் ஜம்மு-காஷ்மீரின் வரைபடத்தை பார்த்தால், அதன் ஒரு பகுதி சீனா வசம் உள்ளது. ஆனால் அதைப்பற்றி நீங்கள் பேசுவதில்லை.

எனவே, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெக்கும்போது, தற்போது சீனாவில் உள்ள ஜம்மு காஷ்மீரின் அந்த பகுதியையும் மீட்டெடுத்தால் நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து