எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஐ.பி.எல். வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ. விதித்துள்ளது.
ஐ.பி.எல். தொடர்...
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 10 அணிகள் மோதும் 18-வது ஐ.பி.எல். தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. ஐ.பி.எல். போட்டிகளுக்குப் பின்னர் நடைபெறும் விருது வழங்கும் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பிலாப்பீஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் எனப்படும் கையில்லாத ஆடைகளை வீரர்கள் அணிவதற்கு பி.சி.சி.ஐ. தடைவிதித்துள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள்...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். தொடரில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாது என்று நினைத்தாலும், உலகின் பல இடங்களில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் இந்த விதிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
கட்டுப்பாடுகள் என்ன ?
ரேஞ்ச் ஹிட்டிங் என்னும் நேரடியாக சிக்ஸர் அடிக்க 2 ஆடுகளங்களும் பக்கவாட்டில் ஒரு ஆடுகளமும் வழங்கப்படும்.திறந்தவெளி ஆடுகளத்தில் விளையாட அனுமதியில்லை.முன்கூட்டியே ஆடுகளத்தில் பயிற்சியை முடித்துவிட்டால் மற்ற அணியினர் அதே ஆடுகளத்தில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.போட்டி நாளில் பயிற்சி எடுக்க அனுமதியில்லை.பிரதான போட்டி நடக்கும் நாளில் உடல் தகுதி சோதனை எதுவும் நடத்தக்கூடாது.
வேறு வாகனத்தில்...
பயிற்சிக்காக வீரர்கள் வரும்போது அணி பேருந்தைப் பயன்படுத்தலாம். அணிகள் இரண்டு பிரிவுகளாக பயணிக்கலாம்.பயிற்சி நாள்களில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே டிரஸ்ஸிங் ரூமிலும் விளையாட்டு மைதானத்திலும் அனுமதிக்கப்படுவார்கள். வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வேறு வாகனத்தில் பயணிக்கலாம், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் இருந்து அணி பயிற்சியைப் பார்க்கலாம்.
போட்டி நாள்...
அங்கீகரிக்கப்பட்ட வீரர்களின் உதவியாளர்கள், அதிகாரபூர்வ ஆவணத்தை கொண்டுவருவது அவசியமாகும். ஒருவேளை கொண்டுவராத பட்சத்தில் முதல் முறை எச்சரித்து அனுப்பப்படும். இரண்டாவது முறை இதுபோன்று செய்தால் அணிக்கு அபராதம் விதிக்கப்படும். வீரர்களுக்கு பயிற்சி வலைகள் வழங்கப்பட்டிருந்தாலும், மைதானத்தில் இருக்கும் எல்.ஈ.டி. பதாகைகளில் அடித்து சேதப்படுத்தக்கூடாது. அதை வீரர்கள் கடைபிடிக்க வேண்டும். எல்.ஈ.டி. பதாகைகளுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் போட்டி ஊழியர்கள் உட்காரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்ஸி நம்பர்...
அதிக ரன் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பிகளை கட்டாயம் அணிய வேண்டும். போட்டிக்குப் பின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், ப்ளாப்பி மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அனுமதிக்கப்படாது. அவ்வாறு அணிந்திருந்தால் முதல் முறை எச்சரிக்கை செய்யப்பட்டு இரண்டாவது முறை அபராதம் விதிக்கப்படும். கடந்த ஐ.பி.எல். சீசனைப் போலவே, போட்டி நாள்களில், அணி மருத்துவர் உள்பட 12 அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜெர்ஸி நம்பர் மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை மாற்ற நினைத்தால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக கூறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


