எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : பிப்ரவரி மாத ஐ.சி.சி. விருதுக்கு தாய்லாந்து இளம் வீராங்கனை பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. விருது...
சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐ.சி.சி. விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐ.சி.சி. விருதுக்குரிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அலானா கிங் (ஆஸ்திரேலியா)
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகி விருது வென்ற ஆஸ்திரேலியாவின் அலானா கிங் ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மெல்பர்னில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுமட்டுமின்றி 3 கேட்ச்களையும் பிடித்து அசத்தினார்.
அனபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா)
இங்கிலாந்துக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 163 ரன்கள் விளாசி ஆட்டநாயகி விருதையும் வென்றார். ஆல்-ரவுண்டரான அனபெல் விக்கெட்டை வீழ்த்தாவிட்டாலும், பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்தார்.
திபாட்சா புத்தாவோங் (தாய்லாந்து)
நேபாளத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் 20 வயதே ஆன தாய்லாந்து வீராங்கனை திபாட்சா புத்தாவோங் மீண்டும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய திபாட்சா புத்தாவோங் 3 விக்கெட்டுகள் வீதம் 4 போட்டிகளில் மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதில் நேபாளத்துக்கு எதிராக 4/10 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் அடங்கும். மேலும், பேட்டிங்கில் அவர் இந்தத் தொடரில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


