Idhayam Matrimony

தலைகீழாக நின்றாலும் தமிழ்நாடு அனுமதிக்காமல் கர்நாடகா மேகதாது அணையை ஒருபோதும் கட்ட முடியாது : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

சனிக்கிழமை, 8 மார்ச் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-12-10

Source: provided

சென்னை : தலைகீழாக நின்றாலும் கர்நாடக அரசு தமிழ்நாடு அனுமதிக்காமல் மேகதாது அணையை ஒருபோதும் கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2025-26 நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சவுதாவில் பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். மேலும், மேகதாது திட்டம் குறித்தும் பேசினார். இந்த திட்டம் குறித்து அவர் பேசும்போது, மேகதாது நீர்தேக்கத்திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் மத்திய அரசின் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 88.27 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகனிடம், 2026-ல் திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, " அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்" என்றார். மேலும் அவர் கூறியதாவது, மேகதாது அணைகட்ட எத்தனை ஆயத்த பணிகளை முடித்து இருந்தாலும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. மேகதாது அணை குறித்து பேசி அமைச்சர்கள் துரைமுருகன், தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேகதாது அணையை அவர்களால் கட்ட முடியாது என்று கூறினார்.

மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக போகாது. ஆகையால், சித்தராமையா சொல்வது சட்டத்துக்கு புறம்பானது. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எது வேண்டுமானாலும் செய்யும். ஆனால் எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது. அந்தளவிற்கு விட்டுவிட மாட்டோம். சட்டம், நம் பக்கம் இருக்கிறது. நியாயமும் நம் பக்கம் இருக்கிறது என்றார்.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. எனினும், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதால், அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உத்தேசித்துள்ள திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது என்பதையும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து