எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான நான்கு ஆண்டு கால ஆட்சியில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் வழங்கியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான திட்டங்களைப் போற்றும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சமூக ஊடகமையம் சார்பில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார். முதல்வர் , பெண்களுக்கான பல்வேறு மகத்தான நலத்திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
விடியல் பயணத் திட்டம் மூலம் அரசின் விடியல் பயண பேருந்துகளில் இதுவரை 642 கோடியே 55 லட்சம் முறை மகளிர் கட்டணமில்லா விடியல் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு பெண் பயணியும் மாதம் சராசரியாக ரூ.888 வரை சேமிக்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 1 கோடியே 15 லட்சம் மகளிர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்களின் வாழ்க்கையை வளம் மிக்கதாக மாற்றியமைத்துள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் தமிழ் வழிப் பள்ளிகளில் பயின்று, தடையின்றி உயர் கல்வி பயிலும் 4 லட்சத்து 97 ஆயிரத்து 525 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களின் மூலமும், பெண்களைப் போற்றும் விதமாகவும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சமூக ஊடகமையம் சார்பில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி உங்கள் கருத்து மதிப்புமிக்கது , ரீல்ஸ் போட்டி, கட்டுரைப் போட்டி, வரைதல்/ஓவியப்போட்டி ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தபடவுள்ளது.
பெண்களைக் கௌரவித்து கொண்டாடும் வகையில் வரைதல்/ஓவியங்கள் அமைதல் வேண்டும். ஓவியங்களைத் தெளிவான முறையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். மேற்கண்டவாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


