Idhayam Matrimony

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழந்து விபத்து

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      உலகம்
small-plane-crash-2025-03-1

அமெரிக்கா, அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லம் முன்பிருந்த வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த சிறுது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர். அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் தீப்பிடித்ததை அடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அந்தப் பகுதி முழுக்க கரும்புகை எழுந்தது. விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து விரைந்து வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

சிறிய ரக விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில், அதில் பயணித்தோர் படுகாயங்களுடன மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து