Idhayam Matrimony

பரிசளிப்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதிநிதி அழைக்கப்படாததால் சர்ச்சை

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      விளையாட்டு
Pak 2024 11 13

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிப்பு விழாவின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரிசளிப்பு மேடையில்...

சாம்பியன்ஸ் டிராபி - 2025 தொடரின் இறுதிப் போட்டி துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடரின் பரிசளிப்பு நிகழ்வு துபாய் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில், ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் மேடைக்கு வந்து வீரர்களுக்கு பரிசளித்தனர். இந்த தொடரை நடத்திய நாடான பாகிஸ்தான் தரப்பில் ஒருவரும் மேடையில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு...

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இயக்குநர்களின் ஒருவருமான சுமைர் அகமது மைதானத்தில் இருந்தும் அவரை ஐ.சி.சி. அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதிநிதியாக சுமைர் அகமது அனுப்பப்பட்டிருந்தார். ஆனால், இறுதி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ஐ.சி.சி.  அவரை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையாகியுள்ளது.

துபாய்க்கு மாற்றம்...

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, அந்நாட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டது. இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியதால் துபாய் மைதானத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து