எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது. இதன்மூலம், இனி உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அணிகளைத் தேர்வு செய்யவும் முடியும்.
இடைநீக்கம்...
15 வயதுக்கு (யு-15) மற்றும் 20 வயதுக்கு (யு-20) உட்பட்டோர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகளை அவசரமாக அறிவித்தது தொடர்பாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை மத்திய விளையாட்டுத்துத் துறை அமைச்சகம் கடந்த 2023, டிச.24-ம் தேதி இடைநீக்கம் செய்திருந்தது.
உத்தரவு ரத்து...
இந்நிலையில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று ரத்து செய்துள்ளது. முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பதவிகளுக்கு கடந்த 2023, டிச.21-ம் தேதி நடந்த தேர்தலில், முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்-ன் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தலைமையிலான குழு வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் பிரிஜ் பூஷணின் கோட்டையான கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் தேசிய போட்டிகளை நடத்துவதற்கான இடத்தினைத் தேர்வு செய்ததை மத்திய அரசு விரும்பில்லை. இதனைத் தொடர்ந்து இடை நீக்க உத்தரவு பாய்ந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
சரியான நடவடிக்கை...
இதனிடையே இடைநீக்க ரத்து குறித்த உத்தரவில், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சரியான நடவடிக்கையே எடுத்துள்ளது. அதனால், இடை நீக்கத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.” என்று விளையாட்டுத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


