எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, முதுகலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (கியூட்) க்கான முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (கியூட்) விண்ணப்பித்த மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு, ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு பிப்ரவரி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் பூர்த்தி செய்து அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தேர்வு மையங்கள் உள்பட 312 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு நேரத்துக்கு வர வேண்டும், தேர்வறை முழுக்க முழுக்க சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும். ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும், தேர்வறையின் வாயில் மூடப்பட்ட பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கையில் ஒரு குடிநீர் பாட்டீல், பேனா, நுழைவுச் சீட்டு, கூடுதலாக ஒரு புகைப்படம், அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்த பொருள்களையும் மாணவர்கள் கொண்டு வர அனுமதிக்கப்படாது என்றும், அவ்வப்போது தேசிய தேர்வு முகமை இணையதளத்தை மாணவர்கள் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


