Idhayam Matrimony

வேளாண் பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்புகள்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
MRK-2-2025-03-15

Source: provided

 சென்னை : கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பேரவையில் பேசிய அவர்,

"சர்க்கரை ஆலைகளுக்கு 2024-2025 அரவைப்பருவத்திற்கு கரும்பு வழங்கிய உழவர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

2024 - 2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள உழவர்களுக்கு,  டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் கரும்புக்கு டன் ஒன்றிற்கு 3,500 ரூபாய் வழங்கப்பட்டு, சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதிக சர்க்கரைக் கட்டுமானம், பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட புதிய கரும்பு ரகங்களை உழவர்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்திடவும். சாகுபடி செலவைக் குறைக்கும் விதமாக கரும்பு விதைக்கரணைகள். நாற்றுகள், இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் நடவு முறை. நுண்ணூட்ட உரக்கலவை, தோகை தூளாக்குதல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற இனங்களை கரும்பு உழவர்களுக்கு மானிய விலையில் வழங்கவும் மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து 10 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து