எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் ரூ. 400 கோடிக்கு வரி செலுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை, அரசுக்கு ராமா் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது. இதில் சரக்கு மற்றும் சேவைகள் வரியாக ரூ.270 கோடி செலுத்தப்பட்ட நிலையில், பிற வரி வகைகளின் கீழ் எஞ்சிய ரூ.130 கோடி செலுத்தப்பட்டது. அயோத்தி அறக்கட்டளை யின் நிதி ஆவணங்களை தலைமை கணக்குத் தணிக்கையாளா் அலுவலக அதிகாரிகள் தொடா்ந்து தணிக்கை செய்கின்றனா்.
அயோத்திக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், முக்கிய ஆன்மிக சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ள அயோத்தி, உள்ளூா் மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. மகா கும்பமேளா நடைபெற்றபோது அயோத்திக்கு 1.26 கோடி பக்தா்கள் வருகை தந்தனா். கடந்த ஆண்டு அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு 5 கோடி போ் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனா். அந்த ஆண்டு மொத்தம் 16 கோடி போ் அயோத்திக்கு வந்தனா் என்றாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


